கொரோனா ஊரடங்கின்போதும், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது
தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் சதவிகிதம், அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தத் தமிழகத்தில் ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு தொடங்கி உள்ளது. ஊரடங்கின்போது பேருந்து சேவைகள், மெட்ரோ, மின்சார ரயில்கள் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் சென்னையில் இயக்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் பயணிக்க ஏதுவாக 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் 5% பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இந்த பேருந்துகளில் பயணிக்கும்போது முகக்கவசம் கட்டாயமாகும். தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தமிக அரசு அறிவித்துள்ளது