முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் – குவியும் பாராட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாறிய பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் உள்ள தனது வீட்டிற்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியானா மாநில போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் சுஷில்குமார், டெல்லி நோக்கி சென்ற பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, எதிரே ஒரு கார் சாலை தடுப்பில் மோதி, மூன்று முறை கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததாகவும், அப்போது உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு காரில் சிக்கிய நபரை மீட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம் ரிஷப் பண்ட்டை மருத்துவமனைக்கு அனுப்பிய அவர், காரில் இருந்த பணத்தையும் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். தாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்பதால் விபத்தில் சிக்கிய நபர் யாரென்று அடையாளம் காண முடியவில்லை என்றும், பேருந்து பயணிகளே அவர் ரிஷப் பண்ட் என தெரிவித்ததாகவும் சுஷில் குமார் கூறியுள்ளார்.

தக்க சமயத்தில் ரிஷப் பண்டின் உயிரைக் காத்த ஓட்டுநர் சுஷில் குமாரின் புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண், அவருக்கு தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் சுஷில் குமாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஓட்டுநர் சுஷில் குமாரையும், நடத்துநர் பரம்ஜித் சிங்கையும் ஹரியானா மாநில போக்குவரத்துத்துறை நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது எப்படி ?

Halley Karthik

மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள்

Halley Karthik

ஆரோவில் பன்னாட்டு நகரம்: சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்

G SaravanaKumar