மகாராஷ்டிரா மாநிலத்தில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 3 குழந்தைகள் உட்பட 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இது புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதனால் பேருந்தின் டீசல் டேங்க் திடீரென வெடித்தது. இதில் பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவவே, 3 குழந்தைகள் உட்பட பேருந்தில் பயணித்த 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஆசிய கபடி சாம்பியன்ஷிப் – 8வது முறையாக பட்டம் வென்று வரலாறு படைத்தது இந்தியா!!
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, புல்தானா சிவில் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







