பேருந்து முன்பதிவு: பணத்தை திருப்பி கொடுத்த போக்குவரத்துத்துறை

முழு ஊரடங்கான 16-ஆம் தேதி, பேருந்து முன்பதிவு செய்தவர்கள் பத்தாயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், காணும் பொங்கல் தினமான 16-ஆம் தேதி முழு…

முழு ஊரடங்கான 16-ஆம் தேதி, பேருந்து முன்பதிவு செய்தவர்கள் பத்தாயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், காணும் பொங்கல் தினமான 16-ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால், 16-ஆம் தேதி பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களது பணம் திருப்பி அளிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, முன்பதிவு செய்தவர்களில் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களது கணக்கில் பணம் திரும்ப செலுத்தப்படும் நிலையில், டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்கள், தங்களது டிக்கெட்டை காண்பித்து பணத்தை திரும்பி பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.