தமிழ்நாட்டில் முதல் முறையாக பட்டதாரி இளைஞர் ஒருவர் கழுதை பண்ணை தொடங்கியுள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி எனும் கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கியுள்ளார். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ணை உரிமையாளர் பாபு, அழிவு நிலையில் உள்ள இந்த கழுதை இனம் கடந்த 10 ஆண்டுகளில் 62 சதவீதம் கழுதையாக குறைய தொடங்கி உள்ளதாகவும், இந்தியாவில் தற்போது 1,40,000 கழுதைகளும், தமிழ்நாட்டில் 1428 கழுதைகளும் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பண்ணையில் 100 கழுதைகள் உள்ளதாகவும், அடுத்த ஒரு வருடத்தில் இதனை 1000 கழுதைகளாக மாற்றுவது தங்கள் நோக்கமாக உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கழுதை பாலில் பல்வேறு மருத்துவ குணம் உள்ளதாகவும், இந்த கழுதை பால் தாய் பாலுக்கு நிகராக செயல்படுவதாகவும், மனித எச்சில் உள்ள லைசை சைன் என்ற ரசாயனம் கழுதை பாலில் உள்ளதால் இது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
தாய்ப்பாலுக்கு இணையாக சக்தி கொண்ட இந்த கழுதைபாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை 7000 விற்கப்படுவதால், இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என்று கூறினார்.
Advertisement: