முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு – கேரளா எல்லையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்கும் போலீசார்

தேனி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கேட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு கேரள எல்லையான தேனி மாவட்டம் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய மூன்று வழித்தடங்களிலும் தமிழக காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.

சான்றிதழ் இல்லாத நபர்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனையடுத்து குமுளி சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் நீண்ட வரிசையில் நின்று சான்றிதழ்களை காட்டிவிட்டு தமிழ்நாட்டிற்குள் வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் வாய்ப்பும் குறையும் என்பதால் இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !

Vandhana

திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

Janani

குறைந்த விலையில் மின்சார வாகனத்தை உருவாக்கி அசத்திய ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்!

Dhamotharan