செப்டம்பர் 1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஒகேனக்கலில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சடையப்பன் என்பரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு கோர்ட்டை அனுகினர். இந்த வழக்கில் உயிரிழந்தவருக்கு 14 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் வாகனத்துக்கும், ஓட்டுநரக்கும் மட்டுமே இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது எனவு,ம் ஓட்டுநர் அல்லாதவருக்கு 1 லட்சம் மட்டுமே இழப்பீடாக அளிக்க முடியும் என தெரிவித்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற முறையில் வாகனம், ஓட்டுநர், பயணி உள்ளிட்ட அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் பொதுக் காப்பீட்டு மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பொதுக் காப்பீட்டு மன்றத்தின் கோரிக்கையை ஏற்று தனது முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.