முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடநாடு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கோடநாட்டில் பங்களா ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பல கோப்புகள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்
ஓம்பகதூர் கொல்லப்பட்டார். அதன்பின் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக போலீசாரால் கருதப்பட்ட கனகராஜ், தினேஷ்குமார் ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர், கொள்ளையில் முக்கிய மூளையாக செயல்பட்ட சயான் குடுமபத்துடன் காரில் செல்லும்போது நடந்த விபத்தில் சயானின் குடும்பத்தினர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில். சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அதன்பின் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை, கொள்ளை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், அரசுத் தரப்பை பொறுத்தவரை புலன் விசாரணை நடந்து வருகிறது எனவும் கூறினார். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படியே புலன் விசாரணை நடைபெற்று வருகிறது எனக்கூறிய வழக்கறிஞர், கோடநாடு வழக்கில் முழுமையான விசாரணை நடத்துவோம் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

Ezhilarasan

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இணையத் தளத்தில் விடைத்தாள் பதிவேற்றம்!

Halley karthi

நடிகையும் எம்.பியுமான நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதி

Gayathri Venkatesan