முக்கியச் செய்திகள் உலகம்

நடைப்பயணமாகவே நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கன் மக்கள்


உதய்

கட்டுரையாளர்

ஆப்கானிஸ்தானில் இருந்து கால்நடையாகவே சென்று, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர் ஆயிரக்கணக்கானோர்…

மூட்டை முடிச்சுகளை தோலில் சுமந்துக் கொண்டும், குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டும், கொளுத்தும் வெயிலிலும் பல மைல் தூரம் கால் நடையாக செல்லும் இவர்கள், சொந்த நாட்டிலேயே வாழ பிடிக்காமல் வேறு நாட்டிற்கு ஆப்கானிஸ்தான் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்து, அந்நாட்டில் தலிபான்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது. விமானம் மூலம் சொந்த நாட்டை விட்டு வெளியேர முயன்று, வானிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காட்சிகள் பார்பவர் நெஞ்சை பதைப்பதைக்க வைத்தது.

கையில் துப்பாக்கி ஏந்தி வலம் வரும் தலிபான்கள் ஒருபுறம், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு குடும்பத்துடன் ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் மற்றொரு புறம்… இந்த வீடியோ காட்சிகள் தான், தற்போது சமூக வளைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு, உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எங்கே போவது, எப்படி போவது என செய்வதறியாது தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், கால்நடைகள் போல ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு குடும்பம், குடும்பமாக நடந்து செல்கின்றனர். ஆனால், ஆப்கானிஸ்தானிய அகதிகளை ஏற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவே ஈரான் நாட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வரும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க, எல்லையில் மூன்று மாகாணங்களில் முகாம்களை அமைத்துள்ளது ஈரான் அரசு. இந்த 3 மாகாணங்களிலும் அவசர கால கூடாரங்களை அமைத்து, ஆப்கானிஸ்தானில் நிலைமை மாற்றம் ஏற்பட்டால், அகதிகள் தாயகம் திரும்ப வேண்டும் என்று கூறி அனுமதிக்கப்படுகிறது. இந்தவகையில் இதுவரை 35 லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள், ஈரானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது.

தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற பல நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் மக்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது.

ஒரு பக்கம் உயிர்பயம், இன்னொரு பக்கம் வாழ்வாதாரமின்மை என ஒவ்வொரு நாளையும் கண்ணீரில்தான் கடத்திச்சென்று கொண்டிருக்கிறார்கள் இந்த மக்கள்.

Advertisement:
SHARE

Related posts

வேலூரில் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Sathis Sekar

போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை,மகன் மறைந்து ஓராண்டு நினைவுநாள்!

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Halley karthi