
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கியது. பா.ரஞ்சித் தனது
வழக்கமான கதைக்களத்தில் இப்படத்தை இயக்கி வருகிறார்.
தங்கலான் என்றால் ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பற்றிதான் இதிலும் சொல்லப்படுகிறது என்று இதன் டீசர் வீடியோவிலேயே தெரிந்தது.
இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதம் ஆகத் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கொண்டாட உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்றுக் கண்காட்சி, திரைப்பட விழா, புகைப்படக் கண்காட்சி, இசை நிகழ்ச்சி, அரசியல் நிகழ்வு, ஓவியக் கண்காட்சி
இலக்கியக் கூடுகை என பல்வேறு நிகழ்வுகளை வானம் -கலைத் திருவிழா- 2023 என்ற பெயரில் அவர் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று (ஏப்ரல் 5) முதல் 30 வரை நடைபெற உள்ளது.
https://twitter.com/Vaanam_Art/status/1643524034364153857?s=20
அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் பிரிவ்யூ திரையரங்கத்தில் PK ரோசி திரைப்பட விழா 2023 என்ற பெயரில் ஏப்ரல் 7 முதல் 9 வரை திரைப்பட விழா நடத்தவுள்ளதாக பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.







