29.5 C
Chennai
April 26, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய பட்ஜெட்- ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்

நாட்டின் வரவு செலவு குறித்து 2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து பார்ப்போம்.

ஒரு ரூபாயில் வரவு

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாட்டின் வருவாயில் ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் 15  காசுகள் பெறப்படுகின்றன. மத்திய வரிகள் மூலம் 7 பைசா கிடைக்கின்றன. கம்பெனிகள் வரிகள் மூலம் 15 பைசா கிடைக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம் 17 பைசா கிடைக்கின்றன. கடன்கள் மற்றும் இதர வருவாய் மூலம்  34 பைசா பெறப்படுகிறது. வரியில்லா வருமானங்கள் மூலம் 6 பைசா கிடைக்கின்றன. கடனில்லா முதலீட்டு வருவாய் மூலம் 2 பைசா கிடைக்கின்றன. கலால் வரி மூலம் 4 பைசா கிடைக்கின்றன.

ஒரு ரூபாயில் செலவு

ஒரு ரூபாயில் பென்சன் திட்டங்களுக்காக 4 பைசா செலவிடப்படுகிறது. இதர செலவுகளுக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. மாநிலங்களுக்கான வரி பகிர்விற்காக 18 பைசா செலவிடப்படுகிறது. நிதி ஆணையம் மற்றும் பிற இதர பரிமாற்றங்களுக்காக 9 பைசா செலவிடப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 பைசா செலவிடப்படுகிறது. பாதுகாப்புத்துறைக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. மானியங்களுக்காக 7 பைசா செலவிடப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் திட்டங்களுக்கு 9 பைசா செலவிடப்படுகிறது. வட்டிகளுக்காக 20 பைசா செலவிடப்படுகிறது என மத்திய நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading