நடுத்தர மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக உள்ளது என்றும், பட்ஜெட்டை வரவேற்கிறோம் என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பினர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில், பட்ஜெட்டை வரவேற்கிறோம். நடுத்தர மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக உள்ளது.
வேளாண்மைக்கு அறிவித்த திட்டங்கள் வரவேற்கத்தக்கது. ஏகலைவா பள்ளிகள் தொடர்பான அறிவிப்பு நல்ல அறிவிப்பு. அடிமட்டத்தில் உள்ளவர்களை மேலே கொண்டு வருவதற்கான முயற்சியாகப் பார்க்கிறோம் எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன் பேசுகையில், டிஜி லாக்கர் பாதுகாக்கப்படுவது முக்கியமானது. சிறு குறு தொழிலதிபர்கள் டிஜி லாக்கர் வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தகது. நகர்ப்புற கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கலாம் என நினைக்கிறோம்.
Skill India Information centre திறப்பது வரவேற்கத்தக்கது. MSME க்கு மிகவும் அருமையான பட்ஜெட் இது. வருமான உச்ச வரம்பு உயர்த்தியிருப்பது பாசிட்டிவாக பார்க்கிறோம். அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார்.
-ம.பவித்ரா





