நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், ரயில்வேக்கு ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023- 2024ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், நெடுஞ்சாலை பணிகள் போன்ற பொதுப் போக்குவரத்து திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்துள்ளார். முக்கியமான 100 போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ. 75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2013-2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
-ம.பவித்ரா








