சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று கொண்டு இருக்கின்ற செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஒரே விருது மேடையில் சகோதர-சகோதரியான பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் பதக்கத்துடன் இருந்தனர்.
பிரிவு போர்டு 3 ஓபன் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
ஓபன் கேட்டகரி ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கம் வென்றது. உர்பேனியா வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றது. மகளிர் ஏ பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. ஜார்ஜியா வெள்ளிப்பதக்கத்தையும், உக்ரைன் தங்கத்தை வென்றது.
முன்னதாக, நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “மாமல்லபுரம் உலக அரங்கில் கொண்டாடப்படுகின்றது. விளையாட்டு என்பது ஒரு அட்சய பாத்திரம். விளையாட்டு என்பது சமத்துவம். உலக அரங்கில் சர்வதேசம் வியக்கும் வண்ணம் விளையாட்டுப் போட்டிகளை நடத்திக் காட்டுவோம்” என்றார்.
Best Fair Play Team – ஜமைக்கா என்ற விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலாளர் இறையன்பு விருதை வழங்கினார். சிறந்த ஸ்டைலிஷ் அணி டென்மார்க்.
Best Men Uniform open team உஸ்பெகிஸ்தான், மங்கோலியா தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதுகளை வழங்கினார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்.
நிகழ்ச்சியில் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், ” நேப்பியர் பாலம் முதல் எங்கும் சதுரங்கத்தை காண முடிந்தது. 3 நாட்களில் முடிவெடுத்து, 3 மாதங்களில் பணிகள் மேற்கொண்டு செஸ் ஒலிம்பியாட் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒலிம்பியாட் நடைபெற்றதிலேயே சிறந்த இடமாக சென்னை உள்ளது” என்றார்.
தொடக்க விழாவில் ரஜினிகாந்தின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அவர் கலந்துகொண்ட நிலையில், ரஜினி கலந்துகொண்டதை நிறைவு விழா காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மண் என்ற பெயரில் காட்சிப்பதிவு நிகழ்வு கமல்ஹாசன் குரலில் நடைபெற்றது. எம் ஜி ஆர் – Genius எனவும், ஜெயலலிதா – empowerment என தெரிவிக்கப்பட்டது. ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி படங்களுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களும் இடம்பெறும் வகையில் கலை நிகழ்ச்சி நடந்தது. சுமார் 10 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.








