முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவை அச்சுறுத்தும் நிலக்கரி பற்றாக்குறை

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நிலக்கரி உடனடியாக கிடைக்கவில்லையெனில் ஓரிரு நாட்களில் தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும், எனவே உடனடியாக நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்  என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மின்வெட்டு நிலவிவருகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான மின்சாரத் தேவையை அனல் மின்நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை வழங்கும் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் தொடர் மழை காரணமாக நிலக்கரியை வெட்டியெடுக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த அளவில், தினசரி மின் தேவை 14,000 மெகாவாட். கோடைக்காலத்தில் இது சுமார் 17,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின் உற்பத்தி நிகழ்கிறது. அனல்மின் நிலையங்கள் தடையின்றி இயங்க, நிலக்கரி அவசியம். அனல்மின் நிலையங்களில், 14 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால், தற்போது நிலவும் நிலக்கரி பற்றாக்குறை தற்காலிகமானதுதான் என்றும், பொதுவாக பருவ மழைக்காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடுகள் இயல்பானவை என்றும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அச்சம் அவசியமற்றது என்றும் மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார். எங்களிடம் போதுமான அளவில் எரிபொருள் உள்ளது. இதனைக்கொண்டு நாடு முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிலக்கரி அமைச்சகத்தின் தலைமையிலான துணைக்குழு வாரத்திற்கு இரண்டு முறை நிலக்கரி இருப்பு நிலவரத்தை கண்காணித்து வருகிறது. இந்தக்குழு சனிக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், அடுத்த மூன்று நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.6 மெட்ரிக் டன் நிலக்கரியை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அடுத்து இந்த அளவு 1.7 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச சந்தையிலும் நிலக்கரி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

Saravana

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!

தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு; இன்றைய நிலவரம்!

EZHILARASAN D