பிரேசில் அரசு அலுவலகங்களில் வன்முறை – காவல்துறையை குற்றம்சாட்டும் அதிபர்

பிரசில் நாட்டில் அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நடந்துள்ள வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையே காரணம் என அந்நாட்டு அதிபர் லூலா டா சில்வா தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் பிரேசில் நாட்டில்…

பிரசில் நாட்டில் அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நடந்துள்ள வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையே காரணம் என அந்நாட்டு அதிபர் லூலா டா சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் பிரேசில் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க  தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போல்சனாரோ தோல்வியடைந்தார், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய அதிபராக லூலா பொறுப்பேற்றுக் கொண்டார். இத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனாரோ தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் இறங்கினார்கள்.

நேற்று போல்சனாரோ ஆதரவாளர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு உச்சக்கட்ட குழப்பம் உருவாகியுள்ளது. உலகத் தலைவர்கள் இந்த நிகழ்வுக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் லூலா டா சில்வா வன்முறை தொடர்பாக பேசுகையில், ”பிரேசிலின் வரலாற்றில் இதுபோல நடந்தது கிடையாது. ஞாயிறு அன்று நடந்த வன்முறை நாசக்காரர்கள் மற்றும் பாசிஸ்டுகளின் செயல். இந்த வன்முறையை காவல்துறை தடுக்க தவறியுள்ளாது. உளவுத்துறையின் அலட்சியமே இதற்கு காரணம். கலவர காரர்களுடன் காவல்துறையினருடன் பேசிகொள்ளும் வீடியோக்களை பார்க்கமுடிகிறது. அவர்கள் கலவர காரர்களை தடுக்கவில்லை” என்று அதிபர் லூலா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.