பிரேசில் நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா டா சில்வா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
கால்பந்தாட்டத்துக்கு பெயர்போன பிரேசிலில் அதிபர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் அதிபரான சமூக தாராளவாத கட்சியை சேர்ந்த சயீர் பொல்சனாரூவுக்கும், தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா டி சில்வாவுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் இருந்தனர். எனினும் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில் தான் பலபரீட்சை நடந்தது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் சில்வாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தன. கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமசோன் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில், பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ 49.10 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபாராக வெற்றிபெற்றுள்ளார். புதிய அதிபராக தேர்வான லுலு டா சில்வா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார்.