இன்ஸ்டாகிராம் காதல்: 52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின்

இன்ஸ்டாகிராமில் பழகி, 52 வயது ரோமியோவின் 9 சவரன் நகையை திருடி சென்ற 29 வயது பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லைச் சேர்ந்த 52 வயதான ஆல்பர்ட் என்பவர் கார்களை வாங்கி விற்பனை…

இன்ஸ்டாகிராமில் பழகி, 52 வயது ரோமியோவின் 9 சவரன் நகையை திருடி சென்ற 29 வயது பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லைச் சேர்ந்த 52 வயதான ஆல்பர்ட் என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், மதுரையைச் சேர்ந்த 29 வயதான சவுண்ட் சத்யா என்பவருடன் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், தனிமையில் சந்தித்து பழக இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நள்ளிரவில் திடீரென விழித்து கொண்ட ஆல்பர்ட் தன்னுடன் வந்த சவுண்ட் சத்யா காணாமல் போனதையும், தன்னுடைய 9 சவரன் நகைகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், அந்த பெண்ணின் செல்போனுக்கு உடனடியாக தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் செல்போன் எண் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலம், இன்ஸ்ட்கிராம் பக்கமும் லாக் ஆனதையும் அறிந்த அவர், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து நகைகளுடன் காணாமல் போன சவுண்ட் சத்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.