முக்கியச் செய்திகள் உலகம்

பிலிப்பைன்சை பந்தாடிய ‘நால்கே’ புயல்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு

பிலிப்பைன்சை நால்கே புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணம் இதில் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய அதிகனமழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இந்நிலையில் புயல், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் தற்போது பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 69 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 63 பேரை காணவில்லை எனவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த புயல் காரணமாக 285.28 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புயலால் மிமாரோபா, பைகால், சேம்பாங்கோ பெனிசுலா, சேன்டோஸ் சிட்டி, மேற்கத்திய பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

Jayapriya

மக்களை பற்றியும் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர் கமல் – எம்.எல்.ஏ விஜய தரணி தாக்கு!

Gayathri Venkatesan

உலக வன தினம்; முதல்வர் பேச்சால் சர்ச்சை

G SaravanaKumar