நெல்லை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தொடங்கப்படவுள்ள புத்தக திருவிழா 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும் சாகித்ய அகாடமி விருதாளர்கள் பலரையும்
உருவாக்கிய நெல்லை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நெல்லை
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இந்தப்
புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதற்கான விளம்பர பதாகைகளை
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைத்து
வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அவர் தாமிரபரணி நதி மற்றும் பெருமையை நாகரிகத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இவ்விழாவானது பொருனை நெல்லை புத்தகத் திருவிழா 2022 என்ற தலைப்பில் நடைபெறுகிறது .இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் புத்தகத் திருவிழா வில் கலை இலக்கியம் சமூக நாவல்கள் வரலாற்று நாவல்கள் தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றத்துக்கான புத்தகங்கள் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டும் புத்தகங்கள் போன்ற பல லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி விற்பனைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் புத்தகத் திருவிழாவிற்கான லச்சனையை உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








