முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதலமைச்சர்…

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரியவந்தது.இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற பகுதியிலிருந்து அந்தோணி ராஜ் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. குடிபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது.

இதனையடுத்து, ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆழ்வார்குறிச்சி போலீசார் ஆரோக்கியராஜ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னதாக சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லை சுத்தமல்லியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.