அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் சோதனை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் புரளி என தெரியவந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம்…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் புரளி என தெரியவந்தது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரியவந்தது. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!

இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 66 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களையும், பிஎச்டி மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.