டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே, சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்தததை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி அவுரங்கசீப் சாலையில், இஸ்ரேஸ் தூதரகம் அமைந்துள்ள நிலையில், தூதரகத்தில் இருந்து 40 மீட்டர் தொலையில் இன்று…

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே, சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்தததை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி அவுரங்கசீப் சாலையில், இஸ்ரேஸ் தூதரகம் அமைந்துள்ள நிலையில், தூதரகத்தில் இருந்து 40 மீட்டர் தொலையில் இன்று மாலை சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், 4 கார்களின் கண்ணாடிகள் மட்டும் உடைந்ததாகவும், டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அமைதியை குலைக்க, நாசக்காரர்களின் சதியாக இது இருக்கலாம் எனவும், காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட, முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும், பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply