நடப்பாண்டுக்குள் 1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: முதல்வர் பழனிசாமி

நடப்பாண்டுக்குள் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாளுடன் கொரோனா ஊரடங்கு முடிவடைவதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி…

நடப்பாண்டுக்குள் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாளுடன் கொரோனா ஊரடங்கு முடிவடைவதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலியில் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் நோய்ப்பரவல் குறைந்தபோதும், கொரோனா பரிசோதனைகளை குறைக்கவில்லை என தெரிவித்தார். இந்தாண்டுக்குள் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 88 ஆயிரத்து 467 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு தளர்வு குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply