பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில், நேற்று JUIF என்ற அரசியல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUIF) கட்சியின் முன்னாள் பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான பஜார் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 200 பேர் காயமடைந்தனர். தற்கொலை படை தாக்குதல் மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பஜார் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







