தொடர் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் கைது!

தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த…

தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு படகையும் அதிலிருந்து 19 தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, காரைநகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படியுங்கள் ; “இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்!” – தவெக செயற்குழு உறுப்பினர்களுக்கு விஜய் அறிவுரை!

இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர், யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடனர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.