இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம் பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது.
துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் படகு புறப்பட்டுள்ளது. லம்பேடுசா தீவில் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்து சிலர் நீந்தி கரைக்குச் சென்றுள்ளனர். மற்றவர்கள் கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர். 42 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் மாயமாகியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: கௌதமி அளித்த நில மோசடி புகார் | அழகப்பன், நாச்சியம்மாளுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்!
இந்த படகில் புர்கினா பாசோ, கினியா-பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பயணித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோர காவல் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். லம்பேடுசா என்பது இத்தாலியின் தெற்கே உள்ள தீவு ஆகும். இது பல ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்தோர் பெருமளவில் வருகை தரும் இடமாக உள்ளது.







