முக்கியச் செய்திகள் தமிழகம்

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து நேற்று 19,000 என்ற அளவில் பதிவானது. இது ஒருபுறமிருக்க கருப்புப் பூஞ்சை நோயும் தமிழகத்தை மிரட்டி வருகிறது. கருப்புப் பூஞ்சையால் தமிழகத்தில் இதுவரை 7,00க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போரின் ரத்தத்தில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டுத் தனிமையில் இருப்போரின் ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும், இரவு உணவுக்கு முன், கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் & நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கணக்கிட வேண்டும், சர்க்கரை அளவு அதிகமாக இருப்போருக்கு ஸ்ட்ராய்டு உடன் சேர்த்து ஆக்ஸிஜனும், இன்சுலினும் செலுத்த வேண்டும், 3 வேளை உணவுக்கு முன், கண்டிப்பாக இன்சுலின் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை அளவு 400ஐ விட அதிகமாக இருப்பின், ஒருமணி நேரத்துக்கு 5 யூனிட் என்ற அளவில் இன்சுலின் செலுத்த வேண்டும். நோயாளிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருத்தல் வேண்டும். ஸ்டிராய்டு எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதால், அதற்கான சிகிச்சையில் இன்சுலினை சேர்த்து மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement:

Related posts

மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு?

Karthick

அகத்தியர் மலையில் புதியவகை பட்டாம்பூச்சி!

எல்.ரேணுகாதேவி

ஆக்சிஜன் பற்றாக்குறை : பிரதமர் அவசர ஆலோசனை

Karthick