பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயுடன் அனுமதிக்கப்பட்ட பொன்.கலியபெருமாள், மற்றும் அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆகியோர் நேற்று காலை உயிரிழந்தார்.
இன்று விஜயகோபலாபுரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை உயிரிழந்தார்.
இதன்காரணமாக கரும்பூஞ்சை நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. வேப்பூர் ஒன்றியம் லப்பைக்குடிகாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.







