ஒட்டன்சத்திரம் அருகே பாஜக பெண் கவுன்சிலர் திடீர் உண்ணாவிரதம்!

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்குவதாகக் கூறி வேலை வழங்காததை கண்டித்து, பாஜக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட…

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்குவதாகக் கூறி வேலை வழங்காததை கண்டித்து, பாஜக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகோட்டை பிஜேபி
சார்பில், 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி
பெற்றவர் சுமித்ரா ரகுபதி. வெற்றி பெற்று மூன்று வருடங்களாகியும், இவர் வெற்றி
பெற்ற பகுதிக்கு நலத்திட்ட பணிகள் ஏதும் செய்யவிடாமல், அரசு பணியாளர்கள்
அரசியல் வாதிகளுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு கையூட்டுப் பெற்றுக்
கொண்டு அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணி
ஒதுக்குவதாக கூறி, கையொப்பம் பெற்றுக் கொண்டு வட்டார வளர்ச்சி
அலுவலர் காமராஜர் என்பவரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா என்பவரும்,
பணி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்
கூட்டத்தை, அதிமுக அம்பிளிக்கை எட்டாவது வார்டு கவுன்சிலர் ராசியப்பன் ஆகிய
இருவரும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் கையொப்பம்
பெற்றுக் கொண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து
பாஜக சேர்ந்த பெண் கவுன்சிலர் மற்றும் அதிமுக கவுன்சிலர், சுட்டெரிக்கும் வெயிலில்
அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி, அவரது போராட்டத்தை கலைத்தனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.