விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கின் சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் 8 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்தும், அந்த பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டியும் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களின் வாழ்விற்கு பாதுகாப்பு இல்லை என்றும், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோரமான செய்திகள் வெளிவருவதாகவும் குற்றம் சாடினார்.
அண்மைச் செய்தி: “திமுக ஆட்சியில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” – அமைச்சர் எ.வ.வேலு
தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை எனக்கூறினார். மேலும், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் மற்றும் 2வது குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டா அவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை எனக்கூறினார். மேலும், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கின் சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








