’கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்’ – நியூஸ் 7 தமிழுக்கு வானதி சீனிவாசன் நம்பிக்கை

கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம்…

கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நமது நியூஸ்7 தமிழின் சிறப்பு செய்தியாளர் வசந்திக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர், தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : சூடானில் இருந்து மீட்பு… தாயகம் திரும்பிய 360 இந்தியர்கள்!

கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், எந்த மாநில தேர்தல் வந்தாலும் தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்வது பாஜகவிற்கு வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்தார். மேலும், தொண்டர்களை நம்பி தான் பாஜக இருக்கிறது என்றும், தலைவர்களை நம்பி இல்லை என்றும் கூறினார். இந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த முழு வீடியோவைக் காண :

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.