சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையில் வரும் 30ம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். 16வது ஐபில் போட்டிகள் கடந்த…

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையில் வரும் 30ம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது.

இந்த டிக்கெட்டை வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவு முதல் மிகுந்த ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விநியோகம் இன்று காலை தொடங்கியதையடுத்து ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட்டை வாங்கி சென்றனர்.

நேரடியாக வாங்கும் டிக்கெட்டின் விலையானது ரூபாய் 1500 முதல் 2500 வரையிலும், ஆன்லைன் டிக்கெட் 2000 முதல் ரூபாய் 5000 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.