முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை

கேரளா – தமிழ்நாடு எல்லையில் உள்ள போழியூர் பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலர் உலக புகழ்பெற்ற அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியின் பிறந்தநாளையொட்டி அவரின் முழுச் உருவச் சிலை வடிவமைத்துத் திறந்துள்ளனர்.

போழியூர் பகுதியில் பெரும்பான்மையாக மீனவ மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த இப்பகுதி இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மது, போதைப் பழக்கங்களால் ஆட்பட்டிருந்தனர். அவர்களை மீட்கும் நோக்கில் அங்கிருந்த தேவாலயம் சார்பில் கால்பந்தாட்ட விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது கேரளாவில் அதிகளவு கால்பந்தாட்ட போட்டிகள் மற்றும் ரசிகர்கள் கொண்ட பகுதியாக போழியூர் மாறியுள்ளது. இந்நிலையில் யூரோ 2021 கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் போழியூரைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர் சிலர் ஒன்றிணைந்து அர்ஜென்டீனா வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலையை வடிவமைத்துள்ளனர்.

மெஸ்ஸின் பிறந்தநாள் கடந்த ஜூன் 24-ம் தேதி கொண்டாடப்பட்டபோது அவருடைய சிலையை ரசிகர்கள் திறந்து கொண்டாடினார்கள். மெஸ்ஸியின் சிலை போழியூர் பேருந்து சந்திப்பு மையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகரான ஜெபின் வடிவமைத்துள்ளார். இதுகுறித்த ஜெபின் குமார் கூறுகையில், ‘மெஸ்ஸியின் பிறந்தநாளின்போது அவருக்கு சிலை திறக்கவேண்டும் என ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே முடிவு செய்தோம். ஆனால் உடனடியாக அந்த பணியை எங்களால் செய்யமுடியவில்லை.

பிறகு யூரோ கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் மெஸ்ஸி சிலை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. 169 அடி நீளம் கொண்ட மெஸ்ஸி சிலை களிமண் மற்றும் பிசின் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை உருவாக்க ஒரு வாரக் காலமானது. கேரளா மாநிலத்தில் முதல் முறையாகக் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

Advertisement:

Related posts

ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவு!

Gayathri Venkatesan

கோவாக்ஸின் தடுப்பூசி 81% வரை பலனளிக்கிறது: பாரத் பயோடெக் நிறுவனம்!

Jeba Arul Robinson

1.97 கோடி பேருக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்? மு.க.ஸ்டாலின்

Ezhilarasan