பாஜக எம்பி நவ்நீத் ராணா சாதி சான்றிதழ் வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மகாராஷ்டிரா மாநிலம்,  அமராவதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நடிகை நவ்நீத் கவுர் ராணாவின் சாதி சான்றிதழை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில்…

மகாராஷ்டிரா மாநிலம்,  அமராவதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நடிகை நவ்நீத் கவுர் ராணாவின் சாதி சான்றிதழை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நடிகை நவநீத் ராணா மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.  ஆனால் அவரது சாதி சான்றிதழ் தவறானது என புகார் எழுந்தது.  இந்த புகார் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் நவநீத் ராணாவின் சாதி சான்றிதழுக்கு தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தின்  உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நவ்நீத் ராணா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான வழக்கு நடைபெற்ற வந்த நிலையில்,  இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  விசாரணையில், “இந்த சாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பான பரீசீலனை குழு,  ஆவணங்களை ஆய்வு செய்து இயற்கை நீதி அடிப்படையில் ஏற்கனவே உரிய முடிவை தெரிவித்துள்ளது எனவும். இந்த புகார் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக் கொள்வதாகவும் கூறி மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.