ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் பாஜகவினர் தர்ணா!

பிரதமரின் தாயார் அவதிக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உத்தர பிரதேசத்தில் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பீகாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் தர்பங்காவில் நடைபெற்ற யாத்திரையின் போது அடையாளம் தெரியாத சிலர் பிரதமர் மோடியின் தாயார் பற்றி அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததாக சமூக வலை தளங்களில் வீடியோக்கள் பரவின. இச்சம்வம் பெரும் பேசு பொருளானது. 

இந்த நிலையில் இன்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், ராகுல் வாகனம் செல்லும்  நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

 ஹர்சந்த்பூருக்கு ராகுல் சென்று கொண்டிருந்தபோது, ​​அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் மற்றும்  அவரது ஆதரவாளர் கத்வாராவில் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராடினர். மேலும் அவர்கள் ராகுல் காந்தி திரும்பிச் செல்லுங்கள் என்றும் நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களிடமும் மன்னிப்பு கேளுங்கள் என்றும்   முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக ஆதரவாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து  ராகுல் காந்தி மாற்று வழியில் சென்றதாக  கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.