பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!

தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன், பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில்…

தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன், பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தாராபுரத்தில் பழமை வாய்ந்த உத்திர வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில், தரிசனம் செய்த எல்.முருகன், தொடர்ந்து தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அலங்கியம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற எல்.முருகனுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பாஜக தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட எல்.முருகன், முக்கியப் பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.