Skip to content
January 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » bjp is stealing money from our bank accounts congress alleges
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது” – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

“எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது”  என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.  இந்த…

Author Avatar

Web Editor

February 22, 20243:04 pm #stealBankbank accountBjp Stealing MoneyCongress

“எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது”  என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.  இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்திருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில வாரங்களில் வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  பொதுத் தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே தங்களது கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலமாக ஜனநாயகமும் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.  இதேபோல பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியால்  சமீபத்தில் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.

இதனை எதிர்த்து,  காங்கிரஸ் கட்சி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது.  இதன் பின்னர் வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதனிடையே,  காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி வரி நிலுவைத் தொகையை வருமான வரித்துறை பிடித்தம் செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்  ஜனநாயக விரோதமாக எங்கள் கணக்குகளிலிருந்து ரூ.65 கோடி வருமான வரித் துறை பிடித்தம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளார் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளது…

“ பாஜக எங்கள் பணத்தை வங்கிகளில் இருந்து திருடுகிறது.  நாங்களும் இந்த நாட்டை ஆட்சி செய்தோம்.  இது போன்று அப்படி ஏதேனும் ஒரே ஒரு சம்பவம்  காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திலோ அல்லது காங்கிரஸ் அரசாங்கத்திலோ பாஜகவினரால் சுட்டிக் காட்ட முடியுமா..? “ என கேள்வி எழுப்பியுள்ளார் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

முட்டை விலை குறைவு.. ஒரு முட்டை விலை எவ்வளவு தெரியுமா?

By Web Editor January 19, 2026

காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

By Web Editor January 19, 2026

‘பராசக்தி’ படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு?

By Web Editor January 19, 2026

விஜய் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ‘தெறி’ ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு?

By Web Editor January 19, 2026
#ट्रेंडिंग हैशटैग:#stealBankbank accountBjp Stealing MoneyCongress

Post navigation

Previous Previous post: அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பிரேமலதாவிடம் மாவட்ட செயலாளர்கள் மீண்டும் வலியுறுத்தல்!
Next Next post: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading