தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு மற்றும் தேநீர் விருந்து நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு மற்றும் தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து, தேநீர் விருந்து நடைபெற்றது.
அண்மைச் செய்தி: ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா
ஆளுநர் மாளிகை சார்பில், அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதிமுக, பாஜக கட்சி பிரதிநிதிகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நீட் உள்ளிட்ட அரசின் சட்ட மசோதாகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








