வாஷின் மிஷின் கட்சியாக பாஜக மாறிவிட்டது-திக் விஜய் சிங்

 பாரதிய ஜனதா வாஷிங் மெஷின் கட்சியாக மாறிவிட்டதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபெற இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் நடை…

 பாரதிய ஜனதா வாஷிங் மெஷின் கட்சியாக மாறிவிட்டதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபெற இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் நடை பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் இன்று  நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்  ”காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 400 ரூபாய் இருந்தது. தற்போது 1050 ரூபாய் உள்ளது. இதேபோன்று பெட்ரோல் டீசல் உள்பட  பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது.

மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் பெரிய குற்றங்களில் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பின்னர் அவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தாலோ அல்லது ஆதரவு தெரிவித்தாலோ அவர்கள் புனிதராகி விடுகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட சஞ்சய் ரத்தோர் பாரதிய ஜனதாகட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவருக்கு மகராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி வாஷிங் மெஷின் போன்று ஆகிவிட்டது. குற்றவாளிகள் புனிதர்களாகும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது. இதுபோன்று செயல்கள் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற அனைத்தையும் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது தான் இந்த நடை பயணத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.