ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக மக்கள் அனைவரும் நிதியளிக்க வேண்டும்: ஹெச்.ராஜா

ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக மக்கள் நிதியளிக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு…

ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக மக்கள் நிதியளிக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராமர் கோயில் கட்டுவதற்கு 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடை திரட்டும் பணிகளில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. பாஜக சார்பிலும் நன்கொடை திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கூட்டணி விவகாரத்தில் கட்சியின் தேசியத் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு பாஜகவினர் செயல்படுவார்கள் எனத் தெரிவித்தார். மகாத்மா காந்தியே ராம ராஜ்ஜியம் வேண்டுமென விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவைப் பற்றி ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் எதுவும் தெரியாது எனவும் கூறிய ஹெச்.ராஜா, ராகுல் காந்தியை விஷயம் தெரிந்தவர் என ஏற்றுக்கொள்பவர்கள்தான் விஷயம் தெரியாதவர்கள் என்றும் சாடினார். சசிகலா விடுதலையானதை அடுத்து, சுதந்திர பறவையாக மாறிவிட்டதாகவும், இனி அவர் முடிவை அவரே எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply