ஆட்சி கவிழ்ப்பில் தொடர்ந்து பாஜக ஈடுபடுகிறது – உச்சநீதிமன்றம் தலையிட கபில்சிபல் வலியுறுத்தல்!

ஆட்சி கவிழ்ப்பில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை…

ஆட்சி கவிழ்ப்பில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். இது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்தும், வழக்குகள் குறித்தும் பதிவிடுவார். அந்த வகையில், மத்திய பாஜகவை விமர்சித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

ஆட்சி கவிழ்ப்பில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவகற்கு எடுத்துக்காட்டுகளாக எந்தெந்த மாநிலத்தில், எந்தெந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

கடன்படி 2016-ல் உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சலப்பிரதேச அரசு ஆட்சி கவிழ்க்கப்பட்டதாவும், 2019-ல் கர்நாடகா அரசு, 2020ம் ஆண்டு மத்திய பிரதேச அரசு, 2022-ல் மகாராஷ்டிரா அரசு என தொடர்ந்து பாஜக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் சட்டம் அனுமதிக்கிறதா என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

அண்மையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், செயல் தலைவர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வரும் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) மற்றும் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி இந்த வலியுறுத்தலை அவர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/KapilSibal/status/1676066324026466305?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.