தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.
வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டார்.
தராபுரம் தனித்தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் , ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு, கோவை தெற்கு வானதி சீனிவாசன் , காரைக்குடி- எச். ராஜா, அரவக்குறிச்சி- அண்ணாமலை , நாகர்கோவில் – எம். ஆர் . காந்தி, திருநெல்வேலி- முன்னாள் எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் , திட்டக்குடி – டி .பெரியசாமி.
இந்நிலையில் இன்று காலை திமுகவிருந்து பாஜகவில் இணைந்த டாக்டர் எஸ் பி சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி வழங்கப்பட்டது. அதைபோல் அதிமுகவிலிருந்து பாஜகவில் சமீபத்தில் இணைந்த டாக்டர் சி. கெ . சரஸ்வதி மொடக்குறிச்சி தகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் தற்போது 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
- தாராபுரம் (தனி)- எல். முருகன்
- ஆயிரம் விளக்கு – குஷ்பூ
- கோவை தெற்கு- வானதி சீனிவாசன்
- காரைக்குடி- எச். ராஜா
- அரவக்குறிச்சி- அண்ணாமலை
- நாகர்கோவில் – எம். ஆர் . காந்தி
- மதுரை வடக்கு- டாக்டர் எஸ். பி சரவணன்
- விருதுநகர்- சி.ஜி பாண்டுரங்கன்
- ராமநாதபுரம்- டி. குப்புராம்
- திருநெல்வேலி- முன்னாள் எம் எல் ஏ நயினார் நாகேந்திரன்
- கொளச்சல்- பி. ரமேஷ்
- திருவையாறு- பூண்டி எஸ். வெங்கடேஷ்
- திட்டக்குடி- டி .பெரியசாமி
- மொடக்குறிச்சி- டாக்டர் சி. கெ . சரஸ்வதி
- திருக்கோவிலூர்- முன்னாள் எம் எல் ஏ கலிவரதன்
- துறைமுகம்- வினோஜ் பி. செல்வம்







