தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தனது மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜென்னர், ரோரி, போப் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், 30 ஆண்டுகால திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தாங்கள் இருவரும் இணைந்து எடுத்த முடிவு என்றும் கூறியிருந்தார். மேலும், பில்கேட்ஸ் உருவாக்கிய அறக்கட்டளையில் விவாகரத்துக்குப் பின்பும் மெலிண்டா பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பில்கேட்ஸ், திருமண வாழ்வு மிகவும் சிக்கலானது. அதை ஆராய்வது வீண். இருவரும் விவாகரத்து தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறோம். எனக்கு வேறொரு திருமணத்தைச் செய்ய விருப்பமில்லை. மீண்டும் மெலிண்டாவையே திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், அவர் என்னைத் திருமணம் செய்வாரா எனத் தெரியாது என்று கூறியுள்ளார்.








