பைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… வைரலான வீடியோ!

உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் இரண்டு இளம் பெண்கள் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிவாங்கி தபஸ். இவருடைய தோழி ஸ்னேகா…

உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் இரண்டு இளம் பெண்கள் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிவாங்கி தபஸ். இவருடைய தோழி ஸ்னேகா ராஜ்வன்ஷி. இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து சாலையில் பைக் ஸ்டண்ட செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பொதுவாக ஆண்கள் பைக் ஸ்டண்ட் செய்வதைப் பார்த்துவந்த அப்பகுதி மக்கள் இந்த இரு பெண்களும் பைக் ஸ்டண்ட் செய்ததை ஆச்சரியமாக பார்த்தனர்.

இந்த வீடியோவில் பைக் ஓட்டும் பெண்ணின் தோளில் மற்றொரு பெண் அமர்ந்து வீடியோவை பதிவு செய்திருந்தார். அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து காசியாபாத் காவல் துறையினர் ஸ்டண்ட் செய்த இருவருக்கும் ரூ.28,000 அபராதம் விதித்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் காவல் துறையினர் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.