இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.13,000 அபராதம்!

நாகர்கோவில் போக்குவரத்திற்கு இடையூறாக இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஒட்டிய மாணவனிடம் இருந்து போலீசாா் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து ரூ.13,000  அபராதம் விதித்தனர். கல்லூரி இளைஞர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில்…

நாகர்கோவில் போக்குவரத்திற்கு இடையூறாக இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஒட்டிய மாணவனிடம் இருந்து போலீசாா் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து ரூ.13,000  அபராதம் விதித்தனர்.

கல்லூரி இளைஞர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சாலையில் செல்லும் போது ரீல்ஸ் எடுப்பதற்காக உயிர் மீது ரிஸ்க் எடுத்து வருகின்றனர்.மேலும் சினிமாக்களில் வரும் மோட்டார் சைக்கிள் சாகச காட்சியை போன்று சாலைகளில் போக்குவரத்து இடையூறாக ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போக்குவரத்து போலீசார் கடும் எச்சரிக்கையை தெரிவித்தாலும் அதையும் மீறி விபத்துகளில் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த விஷ்ணு என்ற கல்லூரி மாணவர் பீச் ரோடு பகுதியில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து  போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் உத்தரவின்பேரில் செட்டிகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது நாகர்கோயிலில் போக்குவரத்துக்கு இடையூராகவும் பொதுமக்களை பயமுறுத்தும் விதமாகவும் இருசக்கர வாகனத்தை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்த கல்லூரி மாணவர் விஷ்னுவின் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அபாயகரமாக வாகனம் ஓட்டியது, அனுமதியின்றி பொது இடத்தில் சாகசம் செய்தது, போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டது ஆகிய விதிமீறல்களுக்கு ரூ.13000  அபராதம் விதித்தனா்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.