பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளூர் மக்களுடன் இணைந்து மீன் பிடித்தார்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதனிடயே அடுத்த மாதம் 6,11 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்  தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் பீகாரில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் என பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பெகுசரை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிராசரத்தை முடித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி  மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.  ஒரு படகில் ஏறி குளத்தின் நடுவில் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து இடுப்பு வரை ஆழ்முள்ள நீரில் இறங்கினார். ராகுலுடன் இணைந்து கூட்டணியை கட்சி தலைவரான விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவரும், கூட்டணியின் துணை முதல்வருமான முகேஷ் சஹானியும் கலந்து கொண்டார். அந்த இடத்தில்  இருந்த மீனவர்கள் பலர் ராகுல் காந்தியிடம் தம் குறைகளை எடுத்து கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.