பீகார் சட்டசபை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவு!

பீகாரில் காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் இன்று முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.

இந்த நிலையில் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் காலை 9 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 13.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கதுவா சட்டமன்ற தொகுதியில் 16.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராஹோபூர் சட்டமன்ற தொகுதியில் 13.78 சதவீத வாக்குகளும், பீகாரில் 2 துணை முதலமைச்சர்கள் போட்டியிடும் தாராப்பூர் சட்டமன்ற தொகுதியில் 15.08 சதவீத வாக்குகளும், லக்கிசாராய் சட்டமன்ற தொகுதியில் 13.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.