பிக் பாஸ் சீசன் 7: வைல்டு கார்டில் நுழையும் அந்த 5 பிரபலங்கள் யார் தெரியுமா?

‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியில் 5 போட்டியாளர்கள் செல்ல இருக்கிறார்கள்’ என கமல் அறிவித்ததிலிருந்தே யார் அந்த ஐந்து பேர் என்பது தான் பிக் பாஸ் ரசிகர்களின்…

‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியில் 5 போட்டியாளர்கள் செல்ல இருக்கிறார்கள்’ என கமல் அறிவித்ததிலிருந்தே யார் அந்த ஐந்து பேர் என்பது தான் பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.  9 பெண் போட்டியாளர்கள்,  9  ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல் பறந்தது.  கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி,  ரவீனா தாஹா,  வினுஷா தேவி,  விஷ்ணு விஜய்,  மாயா எஸ்.கிருஷ்ணா,  விசித்திரா,  யுகேந்திரன் வாசுதேவன்,  பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த சீசன்களை போல் இல்லாமல் இரண்டு வீடுகள்,  இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக தானாகவே வெளியேறினார்.  அதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார்.  18 போட்டியாளர்களில் 3 பேர் வெளியேறியுள்ளதால் 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.  இந்த வார கேப்டன்ஷிப்பாக பூர்ணிமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தில் வைல்டு கார்டு என்ட்ரி இருப்பதால், யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியானது.  அதில் கமல்ஹாசன், ” முந்தைய போட்டிகளில் ஒரு வைல்டு கார்டு என்ட்ரிகளில் போட்டியில் மாறுதல் ஏற்படும்.  இப்போது வீடே இரண்டாக இருக்கிறது. அதனால் வைல்டு கார்டு எண்ட்ரி 5 பேர் அனுப்பப் படவுள்ளனர்.  இவர்கள் ஆட்டத்தையும், மக்கள் கருத்தையும் தெரிந்து கொண்டு உள்ளே செல்ல போகிறார்கள்” என கூறினார்.

இந்நிலையில்,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அன்ன பாரதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்.  மதுரை முத்துவின் பட்டிமன்றக் குழுவில் பேசி பிரபலமானவர்.  இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இதனிடையே, பிரபல பாடகர் கானா பாலா மற்றும் நடிகை அர்ச்சனா,  திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள்,  சீரியல் நடிகர் பப்லு ஆகியோர் வைல்டு கார்டில் செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.  ஆனால் யார் யார் உறுதியாக வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள் என்பது நாளை உறுதியாக தெரியவரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.