பிக்பாஸ்  சீசன் 7: வெற்றியாளர் அர்ச்சனாவுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ்  சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற நிலையில்,  சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.…

பிக்பாஸ்  சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற நிலையில்,  சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.  கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளன.

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி துவங்கியது. பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி,  ரவீனா தாஹா,  வினுஷா தேவி,  விஷ்ணு விஜய்,  மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா,  யுகேந்திரன் வாசுதேவன்,  பவா செல்லத்துரை,  மணி சந்திரா,  அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும்,  போட்டிக்கு இடையே வைல் டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி,  கானா பாலா,  அர்ச்சனா,  தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர். குறைந்த வாக்குகளை பெறுபவர் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்டனர். 

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இந்நிலையில், சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பூர்ணிமா ரவி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி ஆகியோர் இருந்தனர்.  மேலும் 100 நாட்களில் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய பிக்பாஸ்  சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்தெடுக்கப்பட்டார். 

அதனைத்தொடர்ந்து,  இரண்டாவது இடத்தில் மணி தேர்வானார்.  மூன்றாவது இடத்தில் மாயா தேர்வானார்.

இதில் வெற்றியாளராக தேர்வான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு,  பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஒரு வீடு,  மற்றும் கார் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.